TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9.532  ஆக உயர்ந்துள்ளது. 

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு சென்னை, ஜன.9- கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது.

இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தகுதியானவர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி முதல் மார்ச் மாதம் 12-ந்தேதி வரை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, முதலில் 6,244 காலி இடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி 480 இடங்களும், அக்டோபர் மாதம் 9-ந்தேதி 2,208 இடங்களும், அதே மாதம் 28-ந்தேதி 559 இடங்களும் அதிகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் 4-வது முறையாக மேலும் காலி இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

அந்தவகையில் 41 பணியிடங்கள் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டு, குரூப்-4 பணிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 532 ஆக உயர்ந்து உள்ளது.

Leave a Comment