பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை கட்டாய தேர்ச்சி அடையச்செய்யும் ‘ஆல் பாஸ்’ முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி, டிச.24- கட்டாய தேர்ச்சி ரத்து கடந்த 2009-ம் ஆண்டு, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெற வைத்து (ஆல் பாஸ்) மேல்வகுப்புக்கு அனுப்ப வேண்டும். யாரையும் ‘பெயில்’ ஆக்கக்கூடாது. இதற்கிடையே, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ முறையை ரத்து … Read more

தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, தமிழக அரசு தொடங்கிய பணிகள் நிறைவு பெறும் … Read more