ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 2025 மாடல் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தக் காரில், 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இடம்பெற்றுள்ளன.
பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 394 எச்.பி. பவரையும், 550 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் என்ஜின் அதிகபட்சமாக 346 எச்.பி. பவரையும், 700 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
அடாப்டிவ் லைட்டிங் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட்டுகள், முன்புற சீட்டில் மசாஜ் வசதி, ஹெட் அப் டிஸ்பிளே போன்ற புதிய வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஏர் சஸ்பென்ஷன், அடாப்டிங் குரூஸ் கண்ட்ரோல், மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன.
ஷோரூம் விலை சுமார் ரூ.1.45 கோடி. இந்த கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்படுவதால், அதன் விலை முந்தைய மாடலை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.