கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான போகோ, எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான போகோ, எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.போகோ எக்ஸ் 7 5-ஜி, எக்ஸ் 7 புரோ 5-ஜி ஆகிய இரு மாடல்களின் சிறப்பு அம்சங்களை காண்போம். போகோ  எக்ஸ் 7 5-ஜி ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. உள்நினைவகம் 6.67 அங்குல வளைந்த அமோலெட் தொடுதிரை ரெசல்யூசன் 2712×1220 பிக்சல் 5500 எம்.ஏ.எச். பேட்டரி, 45 வாட் சார்ஜர் மீடியாடெக் டைமென்சிட்டி 7300 அல்டிரா பிராசசர் கேமரா: பின்புறம் 50 மெகா பிக்சல் பிரதான கேமரா, 8 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா என 3 கேமராவுடன் வந்துள்ளது.

முன்புறம் 20 மெகா பிக்சல் செல்பி கேமரா உள்ளது. 441 பி.பி.ஐ. கிராபிக்ஸ், இரண்டு சிம் வசதி புளூடூத் வி-5.4 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. உள்நினைவகம் கொண்ட போனின் விலை ரூ.21,999. போகோ எக்ஸ் 7 புரோ 5-ஜி ஆண்ட்ராய்டு 15 ஷாவ்மி ஹைப்பர் ஓ.எஸ்.2.0 8 ஜி.பி. ரேம் மற்றும் 12 ஜி.பி. ரேம் 256 உள்நினைவகம் 6.67 அங்குல முழு எச்.டி. அமோலெட் தொடுதிரை 3200 நிட்ஸ் திரை வெளிச்சம் ரெசல்யூசன் 2712×1220 பிக்சல் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு 6550 எம்.ஏ.எச். பேட்டரி 90 வாட் டர்போ சார்ஜிங் வசதி மீடியாடெக் டைமென்சிட்டி டி-8400 அல்டிரா பிராசசர் கேமரா: பின்புறம் 50 மெகா பிக்சல் பிரதான கேமரா, 8 மெகா பிக்சல் அல்டிரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் முன்புறம் 20 மெகா பிக்சல் செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது. புளூடூத் வி-5.4 இரண்டு சிம் வசதி 8 ஜி.பி. கொண்ட போனின் விலை ரூ.27,999.

Leave a Comment