புதிய ஹோண்டா எஸ்.பி. 160

ஹோண்டா நிறுவனம், 2025-ம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருக்கிறது.

இதில் 162.71 சி.சி. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது.

இது அதிகபட்சமாக 13 எச்.பி. பவரையும், 14.8 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய விதிகளின் படி பைக்கில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் ஓ.பி.டி2.பி தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. சிங்கிள் டிஸ்க் பிரேக், டூயல் டிஸ்க் பிரேக் என இரு வேரியண்ட்கள் உள்ளன. சிங்கிள் டிஸ்க் பிரேக் கொண்ட பைக்கின் ஷோரூம் விலை சுமார் ரூ.1.22 லட்சம். டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் விலை ரூ.1.28 லட்சம்.
