எம்.ஜி. நிறுவனத்தின் குட்டி தயாரிப்பான இந்த கார், 4 இருக்கைகளை கொண்டது. முன் இருக்கை பயணிகள் ரொம்பவே சவுகரியமாக பயணிக்கலாம்.

அளவிலும் சிறியதாக இருப்பதாலும், ‘பளிச்’ வண்ணங்களில் உலா வருவதாலும், பலரது கவனம் இந்த கார் மீது அதிகம் பதிகிறது.

17.3 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக், ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர்கள் இயங்கும் ரேஞ்ச், 41 பி.எச்.பி. ஆற்றல் மற்றும் 110 என்.எம். டார்க் இழுவிசை, ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங்… போன்ற அம்சங்களுடன் எலெக்ட்ரிக் கார்களில் மிக குறைந்த விலை காராக சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது.