மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் மீண்டும் புதிய அறிமுகம் ?

ஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் மாடல்கள், 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக ஸ்கார்பியோ என் கார் மாடலில் கார்பன் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது சந்தையில் ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் என்கிற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும்.

* கார்பன் எடிசன்

வழக்கமான ஸ்கார்பியோ என்-ஐ விட அதிக கவர்ச்சியானதாகவும், புதிய வண்ணத்தாலும் இந்த சிறப்பு பதிப்பு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக மெட்டாலிக் கருப்பு நிறத்தாலேயே ஸ்கார்பியோ என் கார்பன் பதிப்பு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ஸ்மோக்கட் குரோம் அக்சென்டுகள், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் எதிர்மறையான நிற தையலால் அலங்கரிக்கப்பட்ட இருக்கைகள் ஆகியவற்றாலும் இந்த கார் மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

* வேரியண்டு

ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் இரண்டு விதமான வேரியண்டுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இசட்-8 மற்றும் இசட்-8எல் 7 சீட்டர் ஆகியவையே அவை ஆகும். பெட்ரோல், டீசல் இரண்டு ஆப்ஷன்களும் இதில் உண்டு. இத்துடன் இதில் மேனுவல், ஆட்டோமேட்டிக் ஆகிய ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

* விலை

ரூ.19.19 லட்சம் தொடங்கி ரூ.24.89 லட்சம் வரையிலான விலையிலேயே இது விற்பனைக்கு கிடைக்கும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. வழக்கமான ஸ்கார்பியோ என் கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என மஹிந்திரா தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

* என்ஜின்

மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் அலங்கார மாற்றத்தை தவிர வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், என்ஜின் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் இதில் காண முடியாது. 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டீசல் மற்றும் 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் பெட்ரோல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

Leave a Comment