கவாஸாகி இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 2025-ம் ஆண்டு மாடலாக நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ். ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கில் 1,099 சி.சி. இன்லைன், 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 134 எச்.பி. பவரையும், 113 என்.எம். டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மேம்படுத்தப்பட்ட மாடலாக இருந்தாலும் தோற்றத்தில் மாற்றமில்லை. பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டிஸ்க் பிரேக்குகள், முன்புறம் மோனோபிளாக் 4.32 பிரேக் காலிபர்கள் இடம்பெற்றுள்ளன.

4.3 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே, டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., குரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்போனுடன் இணைத்து குரல் கட்டளை மூலம் பயன்படுத்த வசதியாக, புதிதாக ஹேண்டில்பாரில் யு.எஸ்.பி. சி டைப் போர்ட்டும் இடம்பெற்றுள்ளது. இதன் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.13.49 லட்சம்.

Leave a Comment