அல்டிமஸ் நிறுவனம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இ.எம்.எம்.சி. உள் நினைவகம் கொண்ட லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

பட்ஜெட் விலையில் லேப்டாப்பை விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில், அல்டிமஸ் நிறுவனம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இ.எம்.எம்.சி. உள் நினைவகம் கொண்ட லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை எஸ்.எஸ்.டி. கார்டு மூலம் 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இது 14.1 அங்குல (35.56 செ.மீ.) எச்.டி. திரையை கொண்டது. இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இடம் பெற்றிருக்கிறது. 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், ஒரு மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், ஒரு மினி எச்.டி.எம்.ஐ., ஹெட்போன் ஜாக், … Read more

கவாஸாகி இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 2025-ம் ஆண்டு மாடலாக நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ். ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்கில் 1,099 சி.சி. இன்லைன், 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 134 எச்.பி. பவரையும், 113 என்.எம். டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேம்படுத்தப்பட்ட மாடலாக இருந்தாலும் தோற்றத்தில் மாற்றமில்லை. பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், டிஸ்க் பிரேக்குகள், முன்புறம் மோனோபிளாக் 4.32 பிரேக் காலிபர்கள் இடம்பெற்றுள்ளன. 4.3 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே, டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., குரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்போனுடன் இணைத்து குரல் கட்டளை … Read more

கியா நிறுவனம், சிரோஸ் (Syros) கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இது எஸ்.யூ.வி. ரக கார் மாடல்.

‘டால் பாய்’ ஸ்டைலில் இந்த காரை கியா தயார் செய்திருக்கின்றது. எனவே, 6 அடி உயரமானவர்களாலும் இந்த காரில் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும். என்ஜின்: என்ஜினை பொறுத்தவரை, ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் ஜி 1.0 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் டி 1.5 லிட்டர் சி.ஆர்.டி.ஐ. வி.ஜி.டி. டீசல் ஆகிய இருவிதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. பெட்ரோலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 டி.சி.டி. ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 … Read more

பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் இப்போது 3 விலைகளிலும் மற்றும் 3 வகைகளிலும் அறிமுகமாக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் 35 வரிசையில் சேடக் 3501, 3502 மற்றும் 3503 என்ற 3 வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 3.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 153 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.  அதிகபட்சமாக மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. எக்கோ,ஸ்போர்ட்ஸ் என இரண்டு டிரைவிங் மோட்டார்கள் உள்ளன. … Read more