பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் இப்போது 3 விலைகளிலும் மற்றும் 3 வகைகளிலும் அறிமுகமாக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் 35 வரிசையில் சேடக் 3501, 3502 மற்றும் 3503 என்ற 3 வகைகளில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டர்களில் 3.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது.

முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 153 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். 

அதிகபட்சமாக மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

எக்கோ,ஸ்போர்ட்ஸ் என இரண்டு டிரைவிங் மோட்டார்கள் உள்ளன.

கால் வைக்கும் இடத்தில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது இதனால் சீட்டுக்கு அடியில் 35 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 3501கூட்டருக்கு 3 மணி நேரமும்,3502 கூட்டருக்கு 3.25 மணி நேரமும் ஆகும்.

3 ஆண்டு அல்லது 50.000 கிலோ மீட்டர் வாரண்ட்டி உள்ளது.5 அங்குல டிஎப்டி டிஸ்பிலே உள்ளது.

நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல்,டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம் போன்ற ஆவணங்களை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளும் வசதி,அழைப்புகளை கையாளுதல் போன்ற வசதிகள் உள்ளனர்.ஜியோ பென்சிங் திருட்டு தடுப்பு வசதி போன்ற பல அம்சங்கள் உள்ளனர். 

ஷோரூம் விலையாக,3501 ஸ்கூட்டர் ரூ.1.27 லட்சம்,3502 ஸ்கூட்டர் ரூ.1.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.3503 ஸ்கூட்டர் விலை அறிவிக்கப்படவில்லை.

Leave a Comment