‘டால் பாய்’ ஸ்டைலில் இந்த காரை கியா தயார் செய்திருக்கின்றது. எனவே, 6 அடி உயரமானவர்களாலும் இந்த காரில் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும்.

என்ஜின்:

என்ஜினை பொறுத்தவரை, ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் ஜி 1.0 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் டி 1.5 லிட்டர் சி.ஆர்.டி.ஐ. வி.ஜி.டி. டீசல் ஆகிய இருவிதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.
பெட்ரோலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 டி.சி.டி. ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படும்.
பெட்ரோல், 172 என்.எம். டார்க்கையும், டீசல் மோட்டார் 250 என்.எம். டார்க்கையும் வெளியேற்றும்.
தோற்ற பொலிவு:

மூன்று அடுக்குகளில் ஐஸ் கட்டி மாதிரியான லைட்டுகளே ஹெட்லைட்டாக வழங்கப்பட்டு இருக்கின்றன. தூண்டில் முள் வடிவ டி.ஆர்.எல். விளக்கு, அடிப்பக்கத்தில் சில்வர் நிற பம்பர்… என காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்கி இருக்கிறார்கள்.
வேரியண்ட்:
கியா நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்த காரை ஆறு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. எச்.டி.எக்ஸ் பிளஸ் (ஓ), எச்.டி.எக்ஸ். பிளஸ், எச்.டி.எக்ஸ், எச்.டி.கே. பிளஸ், எச்.டி.கே. ஓ மற்றும் எச்.டி.கே. ஆகிய தேர்வுகளிலேயே சிரோஸ் விற்பனைக்கு கிடைக்கும். இது தவிர, வேரியண்டிற்கு ஏற்ப 15 அங்குலம், 16 அங்குலம் மற்றும் 17 அங்குலம் என மூன்று விதமான அளவுள்ள வீல் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கிறது.
ஸ்பெஷல் அம்சங்கள்:

காற்றோட்ட வசதி கொண்ட இருக்கை, பவர் வசதி கொண்ட டிரைவருக்கான இருக்கை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பிரத்யேக ஏ.சி. கண்ட்ரோல்கள், ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டம், ஆம்பியன்ட் லைட், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் மிக தாராளமாக கொண்டிருக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமரா இவற்றுடன் லெவல் 2 அடாஸ் அம்சம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.